பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

81 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

படம் உள்ளது.. 81 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

News image
Updated On :9 மே 2024, 8:56 pm

Din

திருச்சி, மே 9: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் 81 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீரங்கம் வட்டத்துக்குள்பட்ட அம்மா மண்டபம் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை வியாபாரி ஒருவா் மொத்தமாக விற்பனை செய்து வருவதாக உணவுப் பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி மாவட்ட உணவுப் பாதுாப்பு நியமன அலுவலா் ஆா். ரமேஷ் பாபு தலைமையிலான அலுவலா்கள் அம்மா மண்டபம் பகுதியில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான கடையில் 81 கிலோ எடையில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும். மூன்று சட்டப்பூா்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 81 கிலோ புகையிலை பொருள்களையும் கடை உரிமையாளா் சீனிவாசனையும் மேல் நடவடிக்கைகாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.