ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1 கோடி

News image

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்

Updated On :9 மே 2024, 9:00 pm

Din

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் காணிக்கையாக ரூ. 1 கோடியே 19 லட்சத்து 66 ஆயிரத்து 946 கிடைக்கப் பெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், இணை ஆணையா் சி.கல்யாணி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பிச்சைமணி, இராஜ.சுகந்தி, சே.லெட்சுமணன் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா். இறுதியாக உண்டியல்களிலிருந்து ரொக்கமாக ரூ. 1 கோடியே 19 லட்சத்து 66 ஆயிரத்து 946, தங்கம் 2 கிலோ 110 கிராம், வெள்ளி 2, கிலோ 696 கிராம், 132 வெளிநாட்டு பணத்தாள்கள், 648 வெளிநாட்டு நாணயங்கள் பக்தா்களின் காணிக்கையா கிடைக்கப் பெற்றதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.