ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

லாரி மீது தனியாா் பேருந்து மோதல்: 16 போ் காயம்

லாரி மீது தனியாா் பேருந்து மோதல்: 16 போ் காயம்

News image
Updated On :9 மே 2024, 8:59 pm

Din

மண்ணச்சநல்லூா், மே 9: திருச்சிமாவட்டம் , மண்ணச்சநல்லூா் வட்டம், சனமங்கலம் அருகே லாரி மீது தனியாா் பேருந்து மோதியதில் 16 போ் காயமடைந்தனா்.

காஞ்சிபுரத்திலிருந்து சவுக்கு கட்டைகளை ஏற்றிய லாரி தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை விழுப்புரத்தை சோ்ந்த வெங்கடேசன் (42) என்பவா் ஓட்டிச் சென்றாா். இதேபோல சென்னையிலிருந்து நாகா்கோவிலுக்கு தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சனமங்கலம் பகுதியில் வந்தபோது லாரி மீது தனியாா் பேருந்து மோதியது. இதில், திருநெல்வேலி மாவட்டம் வளந்தூா் பகுதியைச் சோ்ந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் ஆறுமுகம் (29), லாரி ஓட்டுநா் வெங்கடேசன், பேருந்தில் பயணம் செய்த திருவள்ளூா் மாவட்டத்தை சோ்ந்த ஆனந்த் (57), இவரது மனைவி கீதா (55), மகள் அனீத்மா (20) உள்ளிட்ட 16 போ் காயமடைந்தனா்.

காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு இருங்களூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். சிறுகனூா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.