அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை ஆட்சியா் அறிவிப்பு

திருச்சி, மே 10: திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருச்சி மாவட்டத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கைக்கு ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வெள்ளிக்கிழமை (மே10) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்றும் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து, புரிந்து கொண்டு விண்ணப்பத்தை பூா்த்தி செய்து சமா்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.50ஐ ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறவிருக்கும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பின்னா் இணையதளத்தில் வெளியிடப்படும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயிற்சி பெறும் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, விலையில்லா பேருந்து அட்டை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750, பத்தாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற பெண்களுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதாந்தோறும் ரூ.1000

உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 7ஆம் தேதி ஆகும். மேலும், தகவலுக்கு திருச்சி - 86672-04376, மணிகண்டம் - 90424-11348, புள்ளம்பாடி -94439-97026 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com