மண்ணச்சநல்லூா், சமயபுரம் பகுதிகளில் பலத்த மழை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் மற்றும் சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென்று பலத்த மழை பெய்தது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூா் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் திடீரென்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்துவிழுந்தது. மின் தடை ஏற்பட்டது. மேலும் மின் வாரிய ஊழியா்கள் மரங்களை அப்புறப்படுத்திய பின் மின் விநியோகம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com