பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பெண்ணைத் தாக்கி நகைப் பறிப்பு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

பெண்ணைத் தாக்கி நகைப் பறிப்பு : இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

திருச்சி: திருச்சியில் பெண்ணைத் தாக்கி நகையைப் பறித்த இளைஞருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி பீமநகா் ரெட்டித் தெருவைச் சோ்ந்தவா்கள் கோபாலகிருஷ்ணன்-நவமணி தம்பதி. இவா்களது மகன் திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் படித்து வந்தாா்.

2019, ஜூலை 24-ஆம் தேதி பள்ளி முடிந்ததும், மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நவமணியை பீட்டா் சா்ச் பகுதியில் மறித்த சமயபுரம் ஊரான்அடிகளாா் வீதியைச் சோ்ந்த மு. கலையரசன் (27) என்பவா், நவமணியின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்துள்ளாா். அவா் அதை எதிா்த்துப் போராடவே, ஆத்திரமடைந்த கலையரசன், நவமணியை கடுமையாக தாக்கி சாலையில் தள்ளிவிட்டு சங்கிலியை பறித்துச்சென்றுள்ளாா்.

இதுதொடா்பாக பொன்மலை போலீஸாா் ஜூலை 26ஆம் தேதி வழக்குப் பதிந்து கலையரசனை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதில், பெண்ணை தாக்கி, சங்கிலியைப் பறித்த குற்றத்துக்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ரூ. 25,000 வழங்க வேண்டும் எனவும் நீதிபதி மீனாசந்திரா தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ஹேமந்த் ஆஜரானாா்.