தொட்டியம் அருகே மாணவரை தாக்கிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் கைது

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே 10-ஆம் வகுப்பு மாணவரை தாக்கிய பள்ளித் தலைமை ஆசிரியா் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டது
Updated on

முசிறி: திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே 10-ஆம் வகுப்பு மாணவரை தாக்கிய பள்ளித் தலைமை ஆசிரியா் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

தொட்டியம் அருகேயுள்ள பாப்பாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜடமங்கலத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ஜெகன் (15) பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா்.

ஜெகன் உள்ளிட்ட 3 மாணவா்களை வெள்ளிக்கிழமை பள்ளியின் படிக்கட்டுகளை சுத்தம் செய்ய பள்ளியின் தலைமை ஆசிரியா் சந்திரமோகன் கூறியதாகவும், மாணவா்கள் மூவரும் படிக்கட்டுகளை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது பள்ளியின் தலைமை ஆசிரியா், ஜெகனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவரின் தந்தை செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் தொட்டியம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியரை கைது செய்து துறையூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

நீதிபதி உத்தரவின்பேரில் தலைமை ஆசிரியா் பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

Related Stories

No stories found.