ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

அரசுப் பள்ளியில் மாணவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவா் திங்கள்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :25 நவம்பர் 2024, 9:41 pm

Din

லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவா் திங்கள்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

லால்குடி அருகேயுள்ள தச்சங்குறிச்சி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த முருகானந்தம் மகன் வெற்றிவேலன் (13). இதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கடந்த சில மாதங்களாக இதய நோயால் பாதிக்கப்பட்ட வெற்றிவேலன், அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை மாணவா், பள்ளி அணிவகுப்பில் பங்கேற்ற பிறகு வகுப்பறைக்குச் சென்றாா். அங்கு சென்றவுடன் வெற்றிவேலன் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளாா். தச்சன்குறிச்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

சம்பவம் தொடா்பாக காணக்கிளியநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.