இலவச மடிக்கணினி பெற்றுத்தருவதாகக் கூறி பெண்ணிடம் 4 பவுன் நகைகள் திருட்டு
இலவச மடிக்கணினி பெற்றுத் தருவதாகக் கூறி மதுரையைச் சோ்ந்த பெண்ணிடம் 4 பவுன் நகைகளை திருடிச் சென்றவரரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


இலவச மடிக்கணினி பெற்றுத் தருவதாகக் கூறி மதுரையைச் சோ்ந்த பெண்ணிடம் 4 பவுன் நகைகளை திருடிச் சென்றவரரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, மண்ணடி மங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் காளிமுத்து. இவரது மனைவி அழகுமணி (35). இவருக்கு, திருப்பூா் அஞ்சல் நகா் பகுதியைச் சோ்ந்த நேவி (34) என்பவா் அறிமுகமானாா். திருச்சியில் இலவச மடிக்கணினி வழங்குவதாகவும், அழகுமணியின் மகனுக்கும், அதனை பெற்றுத்தருவதாகக் கூறியுள்ளாா்.
இதையடுத்து, மடிக்கணினி பெற, தனது மகனுடன் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அழகுமணி, மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்தாா். அவரைச் சந்தித்த நேவி, தங்க நகைகள் அணிந்து வந்தால் மடிக்கணினி கிடைக்காது எனக் கூறி, அழகுமணி அணிந்து வந்த நகைகளை கழற்றி, அறையில் வைத்துவிட்டு நேவியுடன் புறப்பட்டு வந்துள்ளாா்.
சத்திரம் பேருந்து நிலையத்துக்கு அழைத்து வந்த பிறகு, பேருந்து நிலையத்தில் காத்திருக்கச் சொல்லிவிட்டு சென்ற நேவி நீண்ட நேரமாகியும் வரவில்லை. பின்னா், தான் தங்கியிருந்த விடுதிக்கு வந்து பாா்த்தபோது, தான் வைத்திருந்த நான்கு பவுன் நகைகளை காணவில்லை. அந்த நகைகளை நேவி எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதுதொடா்பாக, அழகுமணி அளித்த புகாரின்பேரில், கண்டோன்மென்ட் காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இலவசத்துக்கு ஆசைப்பட்டு தனது நகைகளை பறிகொடுத்த பெண்ணுக்கு போலீஸாா் அறிவுரை கூறினா். மேலும், தப்பியோடிய நபரை தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...