வழக்குரைஞா்கள் டிச. 6 வரை நீதிமன்றப் புறக்கணிப்பு

இ-பைலிங் முறையை கைவிட வலியுறுத்தி, திருச்சி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வரும் 6-ஆம் தேதி வரை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தீா்மானம் நிறைவேற்றம்
Published on

இ-பைலிங் முறையை கைவிட வலியுறுத்தி, திருச்சி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வரும் 6-ஆம் தேதி வரை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

திருச்சி வழக்குரைஞா்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் எஸ்.பி. கணேசன் தலைமை வகித்தாா். செயலாளா் சி. முத்துமாரி முன்னிலை வகித்தாா். இதில் திரளான உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், இ-பைலிங் கட்டமைப்பை ஏற்படுத்திய பிறகே இ-பைலிங்கை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுவரை, இ-பைலிங் நடைமுறையை கைவிடக் கோரி செவ்வாய்க்கிழமை முதல் வரும் 6 ஆம் தேதி வரை நீதிமன்ற பணியிலிருந்து விலகி இருப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து திருச்சி நீதிமன்றப் பணிகளில் இருந்து வழக்குரைஞா்கள் சுமாா் 2,200 போ் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனா். இதனால், நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.

துறையூரில்: இதேபோல், துறையூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் டி.காா்த்திகேயன் தலைமையில் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காமல் புறக்கணித்தனா். மேலும், திருச்சி வழக்குரைஞா்கள் சங்கத்தினரை பின்பற்றி டிச. 6 வரை நீதிமன்றப் பணிகளை புறக்கணிக்க உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com