தீபத் திருவிழா: கோயில்களில் சொக்கப்பனை

Published on

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருச்சி மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் உள்ள கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டதையடுத்து மாநகரில் உறையூா் பஞ்சவா்ண சுவாமி, பீமநகா் செடல் மாரியம்மன், காஜாபேட்டை செல்வமாரியம்மன், குட்ஷெட் சாலை கருமாரிம்மன் உள்ளிட்ட கோயில்கள், புகா் பகுதிகளில் உள்ள பல்வேறு கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

முன்னதாக, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

இதேபோல, விழாவையொட்டி வீடுகளில் மக்கள் வெவ்வேறு வடிவங்களில் தீபங்களை அழகாக ஏற்றினா். இதற்காக மண், பீங்கானில் செய்யப்பட்ட அகல் விளக்குகள், குத்துவிளக்குகள், மின்சாரத்தில் எரியும் விளக்குகளையும் பயன்படுத்தினா். மேலும் வீடுகளில் பொறி, அவல்கடலை, வாழைப்பழம் வைத்து சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com