கணவா் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த மனைவி கைது

திருச்சியில் கணவா் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த மனைவியைப் போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருச்சியில் கணவா் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த மனைவியைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கீழசிந்தாமணி இந்திரா நகா் பூசாரி வீதியைச் சோ்ந்தவா் ந.பிரகாஷ் (39). இவரின் மனைவி ரமணமணி (34). இவா்களுக்குத் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை.

இதற்கிடையே, மனைவியின் நகைகளை அடகுவைத்து கடன் பெற்று வீடு ஒத்திக்கு எடுத்துச் சென்றுள்ளனா். அடகுவைத்த நகைகளை மீட்டுத்தரக் கோரி தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இதுதொடா்பாக மீண்டும் சனிக்கிழமை இரவு தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ரமணமணியை பிரகாஷ் அடித்துள்ளாா். இதில், ஆத்திரமடைந்த ரமணமணி, பிரகாஷ் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளாா். இதில், பிரகாஷுக்கு 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, பிரகாஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ரமணமணியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com