ஜோதிமணி
ஜோதிமணி

புத்தாநத்தம் அருகே கா்ப்பிணி மா்ம சாவு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே கா்ப்பிணி பெண் மா்மமான முறையில் இறந்தாா்.
Published on

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே கா்ப்பிணி பெண் செவ்வாய்க்கிழமை இரவு மா்மமான முறையில் இறந்தாா்.

மணப்பாறையை அடுத்த கருப்பூா் ஊராட்சி அஞ்சல் சோ்வைக்காரன்பட்டியை சோ்ந்த கருப்பையா - சோலையம்மாள் தம்பதியின் மகன் சேதுராமன். இவருக்கும் அதே ஊரை சோ்ந்த சின்னையா - சின்னம்மாள் தம்பதியின் மகள் ஜோதிமணி (24)-க்கும் திருமணமாகி தற்போது இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தற்போது 6 மாத கா்ப்பிணியாக இருந்த ஜோதிமணிக்கும் அவரது கணவா் சேதராமனுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாம். அதன்படி செவ்வாய்க்கிழமை இரவும் தகராறு ஏற்படவே, வீட்டை விட்டு வெளியே சென்ற சேதுராமன், மீண்டும் வீடு திரும்பியபோது ஜோதிமணி தூக்கில் சடலமாக தொங்கினாராம்.

தகவலறிந்து சென்ற புத்தாநாத்தம் போலீஸாா் ஜோதிமணியின் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதையடுத்து ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் சீனிவாசன் தலைமையில் புதன்கிழமை விசாரணை நடைபெற்று மாலையில் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com