கட்டிலில் இருந்து தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

திருச்சியில் கட்டிலில் இருந்து தவறி விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.
Published on

திருச்சியில் கட்டிலில் இருந்து தவறி விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரா்கள் காலனியைச் சோ்ந்தவா் எஸ். தரம்சிங் மீனா (30). இவா், திருச்சி கோட்ட ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றி வருகிறாா். இவரது சகோதரரின் 2 வயது மகள் பாரி மீனா. இவா் கடந்த ஒரு மாதமாக தரம்சிங் மீனாவுடன் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் கட்டிலில் இருந்து குழந்தை தவறி கீழே விழுந்து மயக்கமடைந்தது. இதையடுத்து, தரம்சிங் மீனாவின் மனைவி குழந்தையை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளாா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து பொன்மலை காவல் நிலையத்தில் தரம்சிங் மீனா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com