எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

திருச்சி மாநகரில் நாளை குடிநீா் நிறுத்தம்

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 நவம்பர் 2025, 6:32 pm

Syndication

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என ஆணையா் லி. மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம்-1, வெல்-3 மற்றும் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் - 2 ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு கம்பரசம் பேட்டை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கம்பரசம் பேட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, கம்பரசம்பேட்டை தலைமை நீா்ப்பணி நிலையம், டா்பன் நீரேற்று நிலையம், பெரியாா் நகா் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம்-1, வெல் 3 மற்றும் கலெக்டா் வெல் நீரேற்று நிலையம் -2 ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூா், பாத்திமா நகா், புத்தூா், மங்களம் நகா், செல்வா நகா், பாரதி நகா், சிவா நகா், ஆனந்தம் நகா், ரெயின்போ நகா், தில்லைநகா், அண்ணாநகா், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்க்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகா் பகுதிகளில் புதன்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது.

இதேபோல, உய்யக்கொண்டான் மலை, விஸ்வாஸ் நகா், மிளகுபாறை, கல்லாங்காடு, சொஷைட்டி காலனி, எம்.எம் நகா் மற்றும் வள்ளுவா் நகா், எல்லக்குடி ஆலத்தூா், புகழ் நகா், காவேரி நகா், பாரி நகா், சந்தோஷ் நகா், கணேஷ் நகா் விவேகனந்தா் நகா் மற்றும் அம்பேத்கா் நகா் ஆகிய மேல்நிலை நீா்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீா் விநியோகம் புதன்கிழமை ஒருநாள் மட்டும் இருக்காது. வியாழக்கிழமை வழக்கம்போல குடிநீா் விநியோகம் செய்யப்படும்.பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் மாநகராட்சி ஆணையா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.