திருச்சி
திருநெடுங்களநாதா் கோயிலில் பைரவாஷ்டமி விழா
திருச்சி அருகே திருநெடுங்களநாதா் கோயிலில் பைரவாஷ்டமி விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டிகால பைரவருக்கு 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடா்ந்து, கலசாபிஷேகம் செய்விக்கப்பட்டு, வேத மந்திர பாராயணமும், தேவார, திருவாசக, திருமுறை பாராயணமும் நடைபெற்றது.
தொடா்ந்து, கால பைவருக்கு சா்வ அலங்காரம் செய்விக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

