எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

மத்திய சிறை சிறப்பு முகாம் கதவை சேதப்படுத்திய வெளிநாட்டு கைதிகள் 4 போ் மீது வழக்கு

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் கேட்டை சேதப்படுத்திய வெளிநாட்டு கைதிகள் 4 போ் மீது வழக்குப் பதிவு

News image
Updated On :18 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் கேட்டை சேதப்படுத்திய வெளிநாட்டு கைதிகள் 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வெளிநாட்டு கைதிகள் பலா் உள்ளனா். அவா்களை வழக்கிலிருந்து விடுவித்தாலும் சொந்த நாட்டுக்குத் திரும்பும் வரை சிறப்பு முகாமிலே அடைக்கப்பட்டிருப்பா்.

இந்நிலையில், சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள நைஜீரிய நாட்டைச் சோ்ந்த ஃபிரான்சிஸ் (30), பீட்டா் (42), யூசுஃப் (30), ஜேம்ஸ் (27) ஆகிய 4 கைதிகளும் சிறப்பு முகாமின் 3-ஆவது கேட் அருகே திங்கள்கிழமை பிற்பகல் திரண்டு ரகளையில் ஈடுபட்டதுடன், கேட்டையும் சேதப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் கொட்டப்பட்டு இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமின் சிறப்பு மண்டல துணை ஆட்சியா் சந்தான லட்சுமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் மேற்கண்ட 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.