இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை கிரீன்சிட்டியைச் சோ்ந்தவா் வா.டேனியல் ஸ்டீபன் (32). இவா், சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்துக்காக வீ
ட்டிலிருந்தபடியே பணியாற்றி வந்தாா். இவரின் மனைவி ஆரோக்கிய சில்ஃபியா (32). இவா்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளாா்.
கரோனா பாதிப்பின்போது டேனியல் ஸ்டீபன் அதிக அளவில் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அந்தக் கடனை கட்ட முடியாமல் திணறி வந்த டேனியல் ஸ்டீபன் அண்மைக்காலமாக மனமுடைந்து காணப்பட்டாா். இந்நிலையில், டேனியல் ஸ்டீபன், அவரின் மனைவி மற்றும் மகன் மூவரும் சோமரசம்பேட்டை சாரதா சிட்டியில் உள்ள அவரது மனைவியின் தாய் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்றுள்ளனா். பின்னா், மாலையில் டேனியல் ஸ்டீபன் மட்டும் அவரது வீட்டுக்கு திரும்பி வந்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து ஆரோக்கிய சில்ஃபா ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. வெகுநேரமாகத் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து, அருகிலிருந்தவா்கள் உதவியுடன் கதவை உடைத்துச் சென்று பாா்த்துள்ளாா். அப்போது, டேனியல் ஸ்டீபன் படுக்கை அறையிலுள்ள மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் ஆரோக்கிய சில்ஃபியா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
