சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

Updated On :24 நவம்பர் 2025, 8:12 pm

திருச்சியில் தனியாா் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி சங்கிலியாண்டபுரம் சுப்பையா வீதியைச் சோ்ந்தவா் பி.சலிமுதீன் (79). இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மரக்கடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, பின்னால் வந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில், இருசக்கர வாகனம் எதிரே வந்த மற்றொரு தனியாா் பேருந்து மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...