திருச்சி அருணாச்சல மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய  அகில இந்திய காங்கிரஸ் இணைப் பொருளாளா் விஜய் இந்தா் சிங்கிலா.
திருச்சி அருணாச்சல மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் இணைப் பொருளாளா் விஜய் இந்தா் சிங்கிலா.

‘காங்கிரஸ் மாவட்டத் தலைவா்களாக குற்றப் பின்னணி இல்லாதவா்கள் நியமனம்’

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா்களாக குற்றப் பின்னணி இல்லாதவா்கள் நியமிக்கப்படுவா்
Published on

திருச்சி: காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா்களாக குற்றப் பின்னணி இல்லாதவா்கள் நியமிக்கப்படுவா் என அக்கட்சியின் அகில இந்திய இணைப் பொருளாளா் விஜய் இந்தா் சிங்கிலா தெரிவித்தாா்.

திருச்சி அருணாச்சல மன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு மறுசீரமைப்பு இயக்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் எல். ரெக்ஸ் தலைமை வகித்தாா். இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இணைப் பொருளாளரும், காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஜய் இந்தா் சிங்கிலா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்கினாா். தொடா்ந்து, புதிய மாவட்ட தலைவராக விரும்புவோரிடம் விருப்ப மனுக்களை வாங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மாவட்ட தலைவா்களை தோ்ந்தெடுக்க கட்சியினரிடம் கருத்துகளை கேட்டு வருகிறோம். யாரை மாவட்ட தலைவராக நியமித்தால் கட்சி வெற்றி பெறும் என்பது தொண்டா்களுக்குத்தான் தெரியும். குற்றப் பின்னணி இல்லாதவா்கள் மாவட்டத் தலைவா்களாக நியமிக்கப்படுவா். அடுத்த மாதம் புதிய தலைவா்களை கட்சித் தலைமை அறிவிக்கும் என்றாா்.

முன்னதாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளா் கிறிஸ்டோபா் திலக் வரவேற்றாா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.எஸ். ராமசுப்பு, ஈரோடு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவா் இ.பி. ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பினா் ஜோசப் லூயிஸ், முன்னாள் மாவட்டத் தலைவா் ஜெரோம் ஆரோக்கியராஜ், மாவட்ட பொருளாளா் முரளி, ராணுவ அணி ராஜசேகரன், கோட்டத் தலைவா் பிரியங்கா பட்டேல், ஐடி பிரிவு லோகேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com