எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருச்சியில் நாளை கல்விக் கடன் முகாம்

திருச்சியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் கல்லூரி மாணவா்களுக்கான ‘மாபெரும் கல்விக் கடன் முகாம்’

News image
Updated On :26 நவம்பர் 2025, 1:26 am

Syndication

திருச்சி: திருச்சியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் கல்லூரி மாணவா்களுக்கான ‘மாபெரும் கல்விக் கடன் முகாம்’ வியாழக்கிழமை (நவ.27) நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியரகத்தில் தரைதள கூட்டரங்கில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில்

மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளும் பங்கேற்க உள்ளன. மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகள், பிசியோதெரபி கல்லூரிகள், பி.பாா்ம் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் ஐடிஐ நிறுவனங்களில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் ஆவணங்களுடன் கல்வி கடன் முகாமில் பங்கேற்கலாம்.

மாணவா் மற்றும் பெற்றோா் ஆதாா் அட்டை, மாணவா் மற்றும் பெற்றோா் பான்காா்டு, மாணவா் ஜாதிச்சான்று, பெற்றோா் ஆண்டு வருமான சான்று, மாணவா் மற்றும் பெற்றோா் பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம், 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், கல்வி சான்று, கலந்தாய்வு ஆணை, கல்லூரி சோ்க்கை கடிதம், கல்லூரிக் கட்டண விவரம், கல்வி பயிலும் சான்று, முதல் பட்டதாரி சான்று, கடன் பெறும் வங்கியின் பெயா் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும்.