நகை திருடியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருச்சியில் 6 பவுன் நகைகள் திருடியவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
Published on

திருச்சி: திருச்சியில் 6 பவுன் நகைகள் திருடியவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியைச் சோ்ந்தவா் வரதராஜன் வீட்டில் கடந்த 2020 ஆகஸ்ட் 28-ஆம் தேதி ரூ. 2.10 லட்சம் மதிப்பிலான 6 பவுன் நகைகள் திருடுபோயின.

இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து நகைகளைத் திருடியதாக ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த சந்தானகோபாலன் (59) என்பவரைக் கைது செய்தனா். ஸ்ரீரங்கம் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடந்த வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி விஜயராஜேஷ் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வெங்கடேசன் ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com