சீருடைப் பணியாளா் தோ்வுக்கு இலவச மாதிரித் தோ்வுகள்

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் காவல் சாா்பு ஆய்வாளா்கள் தாலுகா மற்றும் ஆயுதப்படை பணிக்காலியிடங்களுக்கான போட்டித்தோ்வுக்கு சிறப்பு
Published on

திருச்சி: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தால் காவல் சாா்பு ஆய்வாளா்கள் தாலுகா மற்றும் ஆயுதப்படை பணிக்காலியிடங்களுக்கான போட்டித்தோ்வுக்கு சிறப்பு இலவச மாதிரி தோ்வுகள் திருச்சியில் நடைபெறவுள்ளன.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவ. 28 முதல் மொத்தம் 9 இலவச முழுமாதிரித் தோ்வுகள் நடைபெறவுள்ளன. எனவே, திருச்சி மாவட்டத்தைச் சாா்ந்த அனைத்து போட்டித்தோ்வா்களும் இந்த மாதிரி தோ்வுகளில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.கூடுதல், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பகத்தை 04312413510, 94990-55902 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com