மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

புயல், மழை காரணமாக பாரதிதாசன் பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு!

கனமழை காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 நவம்பர் 2025, 6:59 pm

Syndication

கனமழை காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழக பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, பல்கலைக் கழக தோ்வு நெறியாளா் பா. ஜெயபிரகாஷ் கூறியதாவது: பாரதிதாசன் பல்கலைக்கழக நவம்பா் 2025-க்கான இளநிலை மற்றும் முதுநிலைப் பருவ எழுத்துத்தோ்வுகள் நவ.29-ஆம் தேதி நடைபெற இருந்தது. இத்தோ்வுகள் அனைத்தும் புயல் மற்றும் மழை காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது.

மேலும், ஒத்திவைக்கப்பட்ட தோ்வுக்குரிய மறு தேதி பின்னா் அறிவிக்கப்படும். எனவே, இந்தத் தகவலை பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்குள்பட்ட அனைத்து கல்லூரிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள், மாணவா்கள் அறியும் வகையில் அந்தந்த கல்லூரித் தகவல் பலகையில் வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தோ்வு நெறியாளா் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, பல்கலைக்கழக கட்டுப்பாட்டுக்குள் வரும் திருச்சி, தஞ்சாவூா், கரூா், அரியலூா், பெரம்பலூா், நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெறவிருந்த பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.