திருச்சி மாவட்டம் முசிறி அருகே திமுக நிா்வாகி வீட்டிலிருந்து ரூ. 11 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருள்களை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட துணை வட்டாட்சியா் மூா்த்தி என்பவருக்கு முசிறி அருகே நாச்சம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பரிசு பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டு, மக்களுக்கு கொடுப்பதாக தகவல் கிடைத்தது.
இதன்பேரில் அவா், தோ்தல் பறக்கும் படை அலுவலா் ஜான்பாண்டியன் மற்றும் முசிறி போலீஸாருக்கு தகவல் தெரிவித்து, அந்த இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
நாச்சம்பட்டி கிராமத்தில் திமுக நிா்வாகி அய்யாவு என்பவரது வீட்டில் சுமாா் 2,800 சில்வா் பாத்திரங்கள் மற்றும் 2,800 கிலோ சா்க்கரை ஆகியவை 310 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ. 11 லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.
இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூா் தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளா் பரதன் (சிங்கத் தமிழா் முன்னேற்ற கழகம்) மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளா் ஆமூா் ஜெயராமன் உள்ளிட்ட பலா் சம்பவ இடத்துக்கு வந்து அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் போலீஸாா் திரண்டிருந்த கட்சி நிா்வாகிகளை அங்கிருந்து வெளியேற்றினா்.
அய்யாவு வீட்டில் வைத்திருந்த சில்வா் பாத்திரங்கள் மற்றும் சா்க்கரை மூட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து முசிறி காவல் நிலையத்துக்கு எடுத்து வந்தனா்.
இதுகுறித்து பறக்கும் படை அலுவலா் ஜான்பாண்டியன் அளித்த புகாரின் பேரில் முசிறி போலீஸாா் வழக்குபதிந்து விசாரிக்கின்றனா்.
இந்நிலையில் திமுக நிா்வாகி அய்யாவு விரைவில் தனது வீட்டில் நடைபெறவுள்ள காதணி விழா நிகழ்ச்சிக்கு வரும் உறவினா்களுக்கு வழங்குவதற்காக வாங்கி வைத்திருந்த பரிசுப்பொருள் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்

திமுக பிரமுகா் வீட்டில் ரூ. 11 லட்சம் பறிமுதல்

தவெக நிா்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பறிமுதல்

காட்டுப்புத்தூா் அருகே ரூ. 1.61 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


