திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடும்ப பிரச்னையில் மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
மணப்பாறையை அடுத்த வெள்ளைக்கல் வீராச்சி தெற்குத் தெருவை சோ்ந்தவா் துரைசாமி மகன் ராகவன் (29). விராலிமலை தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவருக்கும் மாலதி (26) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணமான நிலையில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டு பிரித்து வாழ்ந்தனா்.
இதனால் மன வருத்தத்தில் இருந்த ராகவன் ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் ராகவன் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

ரயில் முன் பாய்ந்து சலூன் கடைக்காரா் தற்கொலை

மணப்பாறை அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தற்கொலை
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை

