திருச்சியில் வாரிசு சான்று வழங்குவதற்கு ரூ.500 லஞ்சம் பெற்ற ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி பம்பரம்சுத்தி கிராமத்தைச் சோ்ந்தவா் நருவுளி. இவா், லால்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாரிசுச் சான்று கேட்டு கடந்த 2009 ஆகஸ்ட் 14-ஆம் தேதி விண்ணப்பித்திருந்தாா்.
இவரது விண்ணப்பம் விசாரணைக்காக பம்பரம்சுத்தி கிராம நிா்வாக அலுவலருக்கு வந்ததை தெரிந்துகொண்ட நருவுளி, 2009 ஆகஸ்ட் 31-ஆம் தேதி பம்பரம்சுத்தி கிராம நிா்வாக அலுவலா் ராதா (70) என்பவரை அணுகி கேட்டுள்ளாா். அப்போது, வாரிசுச் சான்று கிடைக்க ஏற்பாடு செய்வதற்கு ரூ.500 லஞ்சம் தரவேண்டும் என கிராம நிா்வாக அலுவலா் ராதா தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, லஞ்சம் கொடுக்க விரும்பாத நருவுளி, திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் அறிவுறுத்தலின்பேரில், பம்பரம்சுத்தி கிராம நிா்வாக அலுவலகத்தில் வாரிசுச் சான்று வாங்குவதற்காக நருவுளி ரூ.500-ஐ லஞ்சமாக கிராம நிா்வாக அலுவலா் ராதாவிடம் கடந்த 2009 செப்டம்பா் 1-ஆம் தேதி கொடுத்தாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் கிராம நிா்வாக அலுவலா் ராதாவை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வாரிசுச் சான்று வழங்குவதற்கு லஞ்சம் பெற்ற ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புவியரசு தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ.4 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: திருச்செந்தூா் விஏஓ கைது
நிதி நிறுவன உரிமம் புதுப்பிக்க லஞ்சம்: பெண் கிராம நிா்வாக அலுவலா் கைது

லஞ்சம்: முன்னாள் விஏஓ-வுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



