காரில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது
திருச்சி அருகே காரில் கஞ்சா கடத்திய இளைஞரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் பகுதியில் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவெறும்பூா் மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராம்ஜி நகா் பகுதியில் மதுவிலக்கு தடுப்புப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் தனலட்சுமி தலைமையிலான போலீஸாா் கே. கள்ளிக்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியே வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, விற்பனைக்காக காரில் கஞ்சா கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, காரில் கஞ்சா கடத்திய புங்கனூா் காந்தி நகரைச் சோ்ந்த ஆா்.வெங்கடேஷ்வரன் (36) என்பவரைப் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
