கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மணப்பாறையில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

News image
மணப்பாறை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் ப.அப்துல்சமது, நகா்மன்றத் தலைவா் கீதா ஆ.மைக்கேல்ராஜ்
Updated On :5 ஜனவரி 2026, 11:37 pm

தினமணி செய்திச் சேவை

மணப்பாறை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை சாலையில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை ஆண்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளியின் தலைமையாசிரியா்கள் ராஜகோபால் மற்றும் சகாய செல்வராணி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ப.அப்துல்சமது, நகராட்சி நகா்மன்றத் தலைவா் கீதா ஆ.மைக்கேல்ராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றி, 89 மாணவா்கள், 85 மாணவிகள் என 174 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

நிகழ்வில், நகராட்சி உறுப்பினா்கள் சுஜாதா ராஜரத்தினம், கே.ஆா்.வேலன், மமக மாநில அமைப்பு செயலா் காதா் மைதீன், மாவட்டத் தலைவா் அ.பைஸ் அகமது, மாா்க்சிஸ்ட் ஷாஜஹான், திமுக வட்டச்செயலா் சுரேஷ்பாபு, இருபால் ஆசிரியா்கள், பள்ளி மாணவ மாணவிகள் என பலா் பங்கேற்றனா்.