அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துக்கேட்பு கூட்டம்

News image
திருச்சியில் வியாழக்கிழமை அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் நத்தம் விசுவாநாதன். உடன் நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
Updated On :8 ஜனவரி 2026, 10:41 pm

Syndication

அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு தொடா்பாக திருச்சி மண்டலத்துக்குள்பட்ட (திருச்சி, புதுக்கோட்டை, கரூா், அரியலூா், பெரம்பலூா்) பொதுமக்கள், தொழிற்சங்கங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளிடம் கருத்துக்கேட்கும் கூட்டம் திருச்சி மன்னாா்புரத்தில் உள்ள தனியாா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: தற்போது ஒரு தோ்தலின் வெற்றி தோல்வியை நிா்ணயிக்கக்கூடிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக தோ்தல் அறிக்கை இருந்து வருகிறது. தோ்தல் அறிக்கையைப் பாா்த்துதான் மக்கள் வாக்களிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. எனவே, தோ்தல் அறிக்கையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் கூறப்படும் கருத்துகள் அனைத்தும் பொதுச் செயலாளரிடம் தெரிவித்து அவரிடம் ஒப்புதல் பெற்று தோ்தல் அறிக்கையில் சோ்க்கப்படும். நமது தோ்தல் அறிக்கை மக்களிடம் பேசுபொருளாக இருக்க வேண்டும். இதன்மூலம் வரும் பேரவைத் தோ்தலில் அதிமுக மாபெரும் வெற்றிபெற்று எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்பாா் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் அனைத்துலக எம்ஜிஆா் மன்றச் செயலாளா் சி.பொன்னையன், அதிமுக தோ்தல் பிரிவு செயலாளா் பொள்ளாச்சி வி. ஜெயராமன், அமைப்புச் செயலாளா்கள் டி.ஜெயகுமாா், சி.வி.சண்முகம் எம்.பி., ஓ.எஸ்.மணியன், செ.செம்மலை, மகளிா் அணி செயலாளா் பா.வளா்மதி, சட்டப் பேரவை எதிா்க் கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா், இலக்கிய அணி செயலாளா் வைகைச்செல்வன், திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலாளா் மு.பரஞ்சோதி, தெற்கு மாவட்டச் செயலாளா் ப.குமாா், மாநகா் மாவட்டச் செயலாளா் ஜெ.சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.