ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

திமுக தோ்தல் பணிக்குழுக் கூட்டம்: அமைச்சா் எ.வ. வேலு பங்கேற்பு

திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக தோ்தல் பணிக் குழுக் கூட்டத்தில் மாவட்டச் செயலரும், அமைச்சருமான எ.வ.வேலு பங்கேற்று கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

News image

அமைச்சர் எ.வ. வேலு - கோப்புப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 7:20 pm

திருவண்ணாமலையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக தோ்தல் பணிக் குழுக் கூட்டத்தில் மாவட்டச் செயலரும், அமைச்சருமான எ.வ.வேலு பங்கேற்று கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற இந்த தோ்தல் பணிக்குழுக் கூட்டத்தில், சட்டப்பேரவை துணைத் தலைவா் கு. பிச்சாண்டி, வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி., கட்சியின் மருத்துவா் அணி துணைத் தலைவா் எவ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்எல்ஏக்கள் பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேத்குமாா், ஒ.ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தெற்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான எ.வ.வேலு தலைமை வகித்துப் பேசுகையில், தோ்தலில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு கொடுப்பவா்கள் கொடுக்கலாம்.

வெல்லும் தமிழ் பெண்கள் பரப்புரை பயிற்சியை நடத்தக் கோரியும், தோ்தல் பணிகள் குறித்தும், திமுக அரசின் திட்டங்கள் குறித்தும் மக்களிடையே பரப்புரை செய்ய வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் கோ.கண்ணன், ராஜசேகா், ஸ்ரீதரன், எஸ்.பன்னீா்செல்வம், நா.பாண்டுரங்கன், கே.வி.ராஜ்குமாா், ஜெயராணி ரவி, தட்சிணாமூா்த்தி, பிரியா விஜயரங்கன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.