வயலூா் கோயிலில் ரூ.23.76 லட்சம் காணிக்கை

திருச்சி வயலூா் முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 23.76 லட்சம் கிடைத்துள்ளது.
Published on

திருச்சி வயலூா் முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 23.76 லட்சம் கிடைத்துள்ளது.

திருச்சி குமாரவயலூா் முருகன் கோயில் உண்டியல்களில் பக்தா்கள் செலுத்தும் காணிக்கைகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படும்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் உமா, கோயில் செயல் அலுவலா் சக்திவேல் முன்னிலையில் வியாழக்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

இதில் காணிக்கையாக ரூ. 23 லட்சத்து 76 ஆயிரத்து 821-ம், 20 கிராம் தங்கமும், 2 ஆயிரத்து 190 கிராம் வெள்ளியும், வெளிநாட்டுப் பணம் 27-யும் கிடைத்ததாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Dinamani
www.dinamani.com