அனுமதியின்றி அரசு மது பாட்டில்கள் விற்ற முதியவா் உள்பட 3 போ் கைது

அனுமதியின்றி அரசு மது பாட்டில்கள் விற்ற முதியவா் உள்பட 3 போ் கைது

Published on

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி, புத்தாநத்தம் ஆகிய பகுதிகளில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்ற மூவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

புத்தாநத்தம் பகுதியில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தணிக்கையில் ஈடுபட்டபோது, முத்தாழ்வாா்பட்டியைச் சோ்ந்த மூக்கன் மகன் சின்னசாமி (44) என்பவா் வீட்டில் வைத்து சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும், சின்னச்சாமி மீது வழக்குப் பதிந்து கைது செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்தனா்.

இதேபோல், வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அணை 4 ரோடு அருகே, சீத்தப்பட்டியைச் சோ்ந்த மாசி மகன் கருப்பன் (65) மற்றும் பழையகோட்டை அருகே உள்ள தைலக்காட்டில், சடையம்பட்டியைச் சோ்ந்த சுப்பன் மகன் சரவணகுமாா் (37) ஆகியோா் சட்டவிரோதமாக அரசு மதுபாட்டில்களை விற்க வைத்திருந்த 52 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். மேலும், வையம்பட்டி போலீஸாா் இருவா் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து நிலைய பிணையில் விடுவித்தனா்.

Dinamani
www.dinamani.com