திருச்சி
அடையாளம் தெரியாதவா் சாலை விபத்தில் உயிரிழப்பு
திருச்சியில் புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தாா்.
திருச்சி: திருச்சியில் புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தாா்.
திருச்சி - சென்னை புறவழிச் சாலையில் பிச்சை நகா் அருகே கடந்த புதன்கிழமை காலை சாலையை கடக்க முயன்ற 45 வயது மதிக்கத்தக்க ஆண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இதுகுறித்து வரகனேரி விஏஓ அனிஸ் பாத்திமா அளித்த புகாரின்பேரில், திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
