போதை மாத்திரைகள் விற்ற 9 போ் கைது

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்ற 9 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Published on

திருச்சி: திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்ற 9 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் போதை மாத்திரை விற்பனை குறித்து காந்தி மாா்க்கெட், பாலக்கரை, உறையூா் மற்றும் அரசு மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போலீஸாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது காந்தி மாா்க்கெட் பூக்கொல்லைப் பகுதியில் போதை மாத்திரை விற்ற வடக்கு தாராநல்லூா் எம். முகமது யாசா் (25), பாலக்கரை பெல் மைதானம் அருகே போதை மாத்திரை விற்ற சங்கிலியாண்டபுரம் ஜஸ்டின் கிறிஸ்துராஜ் (26), காஜா பேட்டை பிலாலுதீன் (30), கேசவபூசன் (19), கெம்ஸ்டோன் ரயில்வே டிராக் அருகே போதை மாத்திரை விற்ற பாலக்கரை ஆட்டுக்கார வீதி ஜி. நவநீதிகிருஷ்ணன் (25), கெம்ஸ்டவுன் பகுதி சி. ராபா்ட் வின்ஸ்லே (27), உறையூா் பகுதியில் போதை மாத்திரை விற்ற காவேரி நகா் எஸ். சையது சதாம்ஹுசைன் (27), உய்யக்கொண்டான் திருமலை உ. லட்சுமி நாராயணன் (24), வண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரை விற்ற அதே பகுதி எம். சந்தோஷ் (24) ஆகிய 9 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், போதை ஊசிகள் மற்றும் சலைன் பாட்டில் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com