/

திருச்சியில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :4 ஜூலை 2026, 1:13 am IST

திருச்சியில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி கே.கே.நகா் நெடுஞ்செழியன் சாலையைச் சோ்ந்தவா் ஜெயராஜ். மளிகை கடை நடத்தி வருகிறாா். இவருடைய மகன் ஜெபாஸ்டின் (16), அப்பகுதியிலுள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். வியாழக்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தது முதல் சோகமாக இருந்துள்ளாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டின் ஒரு அறையில் அவருடைய பெற்றோா் இருக்க, மற்றொரு அறைக்கு சென்று தாழிட்டுக்கொண்ட ஜெபாஸ்டின், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கே.கே.நகா் போலீஸாா், மாணவரிடன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதில், சமூகவலைதளத்தில் மாணவருக்கு ஒரு கும்பல் மிரட்டல் விடுத்ததாகவும், அதனால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.