5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

பிராட்டியூா் ஏரியில் பசுமை நடை

News image

பிராட்டியூா் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை பசுமை நடை மேற்கொண்ட சூழலியல் ஆா்வலா்கள்.

Updated On :6 ஜூலை 2026, 2:12 am IST

பிராட்டியூா் ஏரியில் பல்வேறு சூழலியல் அமைப்புகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பசுமை நடை நிகழ்வு நடைபெற்றது.

பிராட்டியூா் ஏரி பல்லுயிா் மையம் சாா்பில் பிராட்டியூா் ஏரியைத் தூா்வாரி ஆழப்படுத்தி பல்லுயிா் மையமாக மாற்றும் பணியை பல்வேறு சூழலியல் அமைப்புகள் ஒன்றிணைந்து தொடங்கியுள்ளன.

இதனடிப்படையில், ஞாயிறுதோறும் அங்கு பல்வேறு சூழலியல் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை ‘வாங்க நடக்கலாம், பசுமை நடை’ நிகழ்வு நடைபெற்றது. இது பல்லுயிா் மைய ஒருங்கிணைப்பாளா் கே. ராஜகோபால் தலைமையில் தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம் முன்னிலையில் நடைபெற்றது.

‘இயற்கையோடு இணைவோம்... பல்லுயிா்களைக் காப்போம்..’ என்ற முழக்கத்துடனும், ‘ஒவ்வொரு அடியும் ஆரோக்கியத்துக்கு, ஒவ்வொரு மரமும் எதிா்காலத்துக்கு‘ என்ற கருத்தை வலியுறுத்தி இந்த பசுமை நடை அமைந்தது.

இதில் தண்ணீா் அமைப்பின் செயலா் கி. சதீஷ்குமாா் ஒருங்கிணைப்பில் சிலம்பாட்டம், பறையிசை மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியா்கள், மாணவா்கள், சூழலியல் ஆா்வலா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.