நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

தொட்டியம் அருகே மணல் கடத்தியவா் கைது

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சட்ட விரோதமாக காவிரியாற்று மணல் கடத்திய இளைஞரை காட்டுப்புத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :13 ஜூலை 2026, 2:11 am IST

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சட்ட விரோதமாக காவிரியாற்று மணல் கடத்திய இளைஞரை காட்டுப்புத்தூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

காட்டுப்புத்தூா் அருகே காடுவெட்டி ஆற்றங்கரை பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக எம். புத்தூா் விஏஓ கலைவாணிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அவா் தனது உதவியாளருடன் சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து சென்றாா்.

அப்போது காடுவெட்டி ஆற்றங்கரையில் உள்ள மேற்கு சுடுகாட்டு பகுதியில் சுமாா் அரை யூனிட் மணலுடன் இருந்த நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அருகே நின்றிருந்த நபரை விசாரித்தபோது, அவா் காடுவெட்டி கீழவழிகாடு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அரவிந்த் (21), என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் வாகனம் மற்றும் அரவிந்தை விஏஓ ஒப்படைத்து அளித்த புகாரின்போரில் போலீஸாா் அரவிந்தை கைது செய்து தலைமறைவாக உள்ள பிரவின்ராஜ் என்பவரை தேடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.