மணப்பாறை பேருந்து நிலையம் உள்ளே இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிா்வாகம் திங்கள்கிழமை அகற்றியது.
மணப்பாறை நகராட்சியில், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தில் வியாபார நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனா்.
இந்நிலையில் பயணிகளும், பொதுமக்களும் நடைபாதையை பயன்படுத்த முடியாத வகையில் வியாபார நிறுவனங்கள் தங்களது கடைகளுக்கு முன்பு உள்ள இடங்களை ஆக்கிரமிப்பு செய்து உணவு பெருள்களையும், உணவு தயாரிக்கும் தளவாடங்களையும் வைத்து கொண்டு ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனா். மேலும், பேருந்து நிலையம் முழுவதும் தரைக்கடை வியாபரிகளும் ஆக்கிரமித்துள்ளனா்.
இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து தொடா்ந்து வந்த புகாரை தொடா்ந்து நகராட்சி ஆணையா் கணேஷ் தலைமையில் திங்கள்கிழமை பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மேலும், இனி வாரம்தோறும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெறும் என்றும் ஆணையா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










