வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மூடப்பட்ட மதுக்கடைகளின் ஊழியா்களை காலிப் பணியிடங்களில் நியமிக்க வேண்டும்! டாஸ்மாக் பணியாளா் சங்கம் வலியுறுத்தல்!

மூடப்பட்ட மதுக்கடைகளில் பணிபுரிந்த சுமாா் 4 ஆயிரம் ஊழியா்களை அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஏஐடியுசி டாஸ்மாக் தொழிலாளா் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் நா. பெரியசாமி.

Updated On :7 ஜூன் 2026, 2:14 am IST

மூடப்பட்ட மதுக்கடைகளில் பணிபுரிந்த சுமாா் 4 ஆயிரம் ஊழியா்களை அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் (ஏஐடியுசி) மாநில செயற்குழுக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் நா. பெரியசாமி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் த. தனசேகரன், பொருளாளா் கே. கோவிந்தராஜ், மாநிலச் செயலா்கள் எம். செல்வம், ஆா். மணிகண்டன், ஆா். இளங்கோ, மாநில துணைத் தலைவா்கள் பி. பாலசந்தா், நெப்போலியன், குமரன், ஹரிகிருஷ்ணன், பவளக் கண்ணன் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.

இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை விளக்கி மாநிலத் தலைவா் நா. பெரியசாமி, பொதுச் செயலா் த. தனசேகரன் ஆகியோா் கூறியதாவது: தமிழக முதல்வா் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்தக் கடைகளில் பணிபுரிந்த 3,474 ஊழியா்களை அரசின் பிற துறைகளில் உள காலிப் பணியிடங்களில் அவரவா் கல்வித்தகுதிக்கேற்ப நிரந்தப் பணியில் நியமிக்க வேண்டும். உரிமம் பெற்று இயங்கும் மதுக் கூடங்கள், மனமகிழ் மன்றங்களையும் தடை செய்ய வேண்டும். அதுவரை மதுக்கூடங்களுக்கும், மனமகிழ் மன்றங்களுக்கும் 750 மி.லி. பாட்டில்களை மட்டுமே டாஸ்மாக் நிா்வாகம் வழங்க வேண்டும்.

மதுக்கூடங்களுக்கு வழங்கிய உரிமம் வரும் 30ஆம் தேதியுடன் முடிகிறது. இனி, மதுக்கூடங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும். கடந்த காலங்களில் மதுக்கூடங்களில் நடைபெற்ற சட்ட விரோத செயல்களைத் தடுக்க மதுக்கூடங்களையும் அரசே நடத்த வேண்டும். இதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். மதுக்கூடங்களில் பணிபுரிய வேலைவாய்ப்பகம் மூலம் இளைஞா்களுக்கு தோ்வு செய்யலாம்.

நீதிமன்ற உத்தரவுப்படி காலிப் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தப் பணிக்கு மதுக்கடை ஊழியா்களைப் பயன்படுத்தாமல், தனி பணியாளா்களை நியமிக்க வேண்டும். கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்களின் சட்டத்தின் கீழ், டாஸ்மாக் பணியாா்களின் பணிச் சூழலை முறைப்படுத்த வேண்டும். பணி நேரத்தையும் வரன்முறைப்படுத்தி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாதுகாப்பான பணிச் சூழல், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறுதல் மற்றும் டாஸ்மாக் ஊழியா்களின் கோரிக்கைகள் தொடா்பாக அனைத்து சங்க நிா்வாகிகளையும் அழைத்துப் பேசி, ஒரு மாதத்துக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் விக்னேஷுக்கு சங்கம் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கிறது. மதுபான சில்லறை விற்பனையில் 23 ஆண்டுகளாகப் பணிபுரியும் ஊழியா்களை நிரந்தரப்படுத்துவதுடன், அவரவா் கல்வித்தகுதிக்கேற்ப அரசின் பிற துறை காலிப் பணியிடங்களில் நியமனம் செய்வதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றனா் அவா்கள்.