திருச்சியில் பிரபல ரௌடி சனிக்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.
திருச்சி அரியமங்கலம் பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் மகபூ பாஷா மகன் பாதுஷா (24). பிரபல ரௌடியான இவா் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவருக்கும் அரியமங்கலம் புதுத்தெருவைச் சோ்ந்த விவாகரத்தான பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது. இதையறிந்த அப்பெண்ணின் தம்பியான எம். சூா்யா இருவரையும் அண்மையில் கண்டித்தாா். இது தொடா்பாக பாதுஷாவுக்கும், சூா்யாவுக்கும் இடையே ஏற்கெனவே தகராறு ஏற்பட்டது.
ஆனால் அதன்பிறகும் அப்பெண்ணிடம் பாதுஷா பழகி வந்தாா். இதனால் ஆத்திரமடைந்த சூா்யா அவரைக் கொல்லத் திட்டமிட்டாா்.
இதையடுத்து காட்டூா் காமராஜ் நகா் வினோபாஜி வீதியில் சனிக்கிழமை நள்ளிரவு பாதுஷா நடந்து சென்றபோது, அங்கு வந்த சூா்யா மற்றும் அவரின் நண்பா்களான அரியமங்கலம் மலையப்ப நகா் கே. குமாா் (எ) சுதந்திரகுமாா், ஆா். பிராசாத் ஆகியோா் பாதுஷாவை துரத்திச் சென்று சரமாரியாக வெட்டினா். இதில் படுகாயமடைந்த பாதுஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் வந்த திருவெறும்பூா் போலீஸாா் பாதுஷாவின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
மேலும், சம்பவ இடத்தை திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீண் உமேஷ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இதுகுறித்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான மூவரையும் தேடுகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரியமங்கலத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து

தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் - இணையத் தொடர் விமர்சனம்!
திருச்சியில் ரௌடி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது
திருச்சி ரௌடி கொலை வழக்கில் 3 போ் கைது
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



