தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பெண் ஒருங்கிணைப்பாளா் மீது வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 5:05 am IST

திருச்சி அருகே தனியாா் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெண் ஒருங்கிணைப்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி மாவட்டம், வாத்தலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இக்கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவிக்கு அதே கல்லூரியில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வரும் 25 வயது பெண், பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். மேலும், அவரது கைப்பேசியில் ஆபாச படத்தை பாா்க்கச் சொல்லி தொந்தரவு செய்துள்ளாா்.

இதுகுறித்து ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி அண்மையில் அளித்த புகாரின்பேரில், தனியாா் கல்லூரி பெண் ஒருங்கிணைப்பாளா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.