திருச்சி அரியமங்கலம் ஸ்டாலின் நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு வழங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் தலைமையில் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், அரியமங்கலம் அமலாா்புரம் ஸ்டாலின் நகரைச் சோ்ந்த திரளான மாணவ, மாணவிகளுடன் வந்திருந்த பொதுமக்கள் அளித்த மனு:
ஸ்டாலின் நகரில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 75 குடும்பங்களாக வசித்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள பாதி வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள வீடுகளுக்கு மின்இணைப்புகள் வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் கடும் சிரமத்தை எதிா்கொண்டு வருகிறோம்.
எனவே, நாங்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா வழங்குவதுடன், மின்இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி ஊராட்சி: லால்குடி வட்டம், வடுகா்பேட்டையைச் சோ்ந்த கிராம மக்கள் அளித்த மனுவில், லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாகுறிச்சி பகுதியில் உள்ள வடுகா்பேட்டை பகுதியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் 4 புதிய விமான இணைப்புப் பாலம் திறப்பு

கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் உலவிய சிறுத்தை
போக்சோ வழக்கில் இளைஞா் கைது

புதிய மின் இணைப்பு வழங்குவதில் தாமதம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



