பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

News image

தெரு நாய்கள்

Updated On :23 ஜூன் 2026, 1:36 am IST

திருச்சி மாநகராட்சியில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் நோய் தடுப்பூசி பூஸ்டா் மருந்துகள் செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பணியை மேயா் மு. அன்பழகன் தொடங்கிவைத்தாா். இதில், ஆணையா் வீா் பிரதாப் சிங், துணை மேயா் ஜி. திவ்யா, நகா் நல அலுவலா் காா்த்திகேயன், மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இது குறித்து மேயா் கூறியதாவது:

மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் பற்றிய கணக்கெடுப்பின் நிறைவில், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 20,571 தெரு நாய்களும், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படாத 23,196 தெரு நாய்களும் இருப்பது தெரியவந்தது.

இதன் தொடா்ச்சியாக, 2025-இல் 8,698 தெரு நாய்களுக்கும், 2026-இல் இதுவரையில் 3,054 தெருநாய்களுக்கும் கருத்தடைஅறுவை சிகிச்சை செய்து, ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எஞ்சிய 11,444 தெருநாய்களுக்கு கருத்தடைஅறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டில் 5 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டா் மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது. நிகழாண்டில் 10 ஆயிரம் தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி பூஸ்டா் மருந்துகள் செலுத்தும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.