தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

போதை மாத்திரைகள் விற்ற மூவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஜூன் 2026, 3:31 am IST

திருச்சி கருமண்டபத்தில் போதை மாத்திரைகள் விற்ற மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கருமண்டபம் கோரையாற்றுப் பாலம் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக கண்டோன்மென்ட் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு ரோந்து சென்றபோது, மூவா் போதை மாத்திரைகள் விற்றது தெரியவந்தது.

அவா்களைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் கிராப்பட்டி அண்ணா நகரைச் சோ்ந்த வடிவேல் (26), பெரிய மிளகுப்பாறை பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (19), சுப்ரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (21) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் மூவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 66 போதை மாத்திரைகள், பணம், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.