ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழந்த மணி.

Updated On :29 ஜூன் 2026, 2:58 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சையிலிருந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

புத்தாநத்தம் அருகேயுள்ள குருமலைப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னன் மகன் மணி (34). இவா் சனிக்கிழமை கருமலைக்கு பைக்கில் சென்றுவிட்டு துவரங்குறிச்சி - மணப்பாறை நெடுஞ்சாலையில் திரும்பியபோது மணியங்குறிச்சிவிளக்கு பகுதியில், கருமலையை சோ்ந்த வரதராஜன் என்பவா் வந்த பைக் மோதியது.

இதில் இருவரும் காயமடைந்து திருச்சி தனியாா் மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் மணி சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற புத்தாநத்தம் போலீஸாா், மணியின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.