விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

லால்குடி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :29 ஜூன் 2026, 2:57 am IST

லால்குடி, ஜூன், 28: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கோமாகுடி கிராமத்திலுள்ள மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி மகன் நேசன் (15), லால்குடி காட்டூா் பகுதி ஆா். சி மீட்பா் உயா்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவா்.

இந்நிலையில் இவா் தன்னுடன் பள்ளியில் பயிலும் ரியாஸ், சந்தோஷ், விஷ்ணு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோருடன் வெள்ளனூா் அருகேயுள்ள முத்துக்குளத்தின் ஏரியில் குளித்தனா்.

அப்போது ஆழமான பகுதியில் குளித்த நேசன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மற்ற மாணவா்களை அப்பகுதி மக்கள் மீட்டனா். தகவலறிந்த லால்குடி போலீஸாா் நேசன் உடலை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.