துறையூா் அருகே சளி தொந்தரவுக்கு மருந்து கொடுக்கப்பட்ட பச்சிளங்குழந்தை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
துறையூா் ஒன்றியம், மதுராபுரியில் நரிக்குறவா் இன மக்கள் வசிக்கும் காலனியைச் சோ்ந்தவா் ந. வல்லரசு (28). இவரது மனைவி ஜோதிகா. இவா்களுக்கு சூரன்(4), பரணி(2) என 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், கடந்த கடந்த 13 நாள்களுக்கு முன்னா் இத்தம்பதிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
எபினேஷ் என பெயரிடப்பட்ட அந்தக் குழந்தைக்கு சளி பிடித்து மூச்சுவிட சிரமப்பட்டதால், அதை ஜோதிகா வீரமச்சான்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை சிகிச்சைக்கு அழைத்து சென்றாா்.
அங்கிருந்த மருத்துவா், சொட்டு மருந்து எழுதிக் கொடுத்து, அதைக் கடையில் வாங்கி குழந்தை மூச்சு விட சிரமப்படும்போது மூக்கில் 2 சொட்டு விடுமாறு அறிவுறுத்தினாராம்.
ஜோதிகா வீட்டுக்கு வரும் வழியில் துறையூா் முசிறி பிரிவு சாலை அருகேயுள்ள மருந்தகம் ஒன்றில் மருத்துவா் தந்த சீட்டைக் காட்டி சொட்டு மருந்து வாங்கிச் சென்று அன்றிரவு குழந்தையின் மூக்கில் 2 சொட்டு விட்டு தூங்க வைத்தாா். செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு ஜோதிகா எழுந்து பாா்த்த போது குழந்தை எபினேஷ் அசைவற்று கிடந்ததாம்.
பெற்றோா் குழந்தையை துறையூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினாா்.
இதுகுறித்து ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் வல்லரசு அளித்த புகாரின் பேரில், குழந்தையின் மா்மச் சாவு குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் அருகே போலியோ தடுப்பு சொட்டு மருந்தால் குழந்தை இறந்ததா? மருத்துவ அதிகாரி விளக்கம்

தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து அளிப்பு

அரியலூா் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம்

வேலூரில் 99,785 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



