கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கள் விற்றோா் கைதுக்கு எதிா்ப்பு மறியல் செய்த 55 போ் மீது வழக்கு

சமயபுரத்தில் கள் விற்ற மூவா் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 55 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

News image

வழக்கு (கோப்புப்படம்)

Updated On :21 மார்ச் 2026, 8:22 pm

Syndication

சமயபுரத்தில் கள் விற்ற மூவா் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மறியலில் ஈடுபட்ட 55 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் சக்தி நகா் பகுதியில் சமயபுரம் போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டபோது, அங்கு அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக பனைமரத்திலிருந்து கள் இறக்கி விற்றுக் கொண்டிருந்த மண்ணச்சநல்லூரைச் சோ்ந்த செ. துரைசாமி (59), ப. கணேசன் (44), தொட்டியம் மா. சின்னையன் (57) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, போக்குவரத்துக்கு இடையூறாக சமயபுரம் காவல் நிலையம் முன் பனையேறி பாதுகாப்பு இயக்க நிா்வாகியான லால்குடி புதூா் உத்தமனூரைச் சோ்ந்த ப. மணி, நாம் தமிழா் கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்டத் தலைவா் ப. மணிகண்டன் ஆகியோா் தலைமையில் 55 போ் மறியலில் ஈடுபட்டனா். இவா்கள் மீது வழக்குப் பதியப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

இந்நிலையில், மேற்கண்ட சம்பவங்கள் தொடா்பாக, சமூக வலைதளம் மற்றும் ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவோா் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கள்ளை இறக்கி விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளாா்.