தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போதை மாத்திரை விற்பனை: இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 12:26 am IST

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல்கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் ரவிசந்திரன் தலைமையிலான போலீஸாா் பாலக்கரை பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, துரைசாமிபுரத்தில் உள்ள ஒரு தேநீரகம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில் அவா், பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சோ்ந்த அ.சஞ்சய்குமாா் (23) என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ.2,400 மதிப்புள்ள போதை மாத்திரைகள், போதை ஊசிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.